அரசு வழக்கறிஞர் ஆனந்த் கேப்ரியலுக்கு குவியும் பாராட்டுக்கள்.
தூத்துக்குடியில் டிஎஸ்பி உள்ளிட்ட 9 காவலருக்கு ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுத்த அரசு வழக்கறிஞர் ஆனந்த் கேப்ரியலுக்கு குவியும் பாராட்டுக்கள்.;

தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் கடந்த 1999 ஆம் ஆண்டு கூலி தொழிலாளி வின்சென்ட் என்பவர் மர்ம முறையில் இறந்தார். அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு வழக்கறிஞர் ஆனந்த் கேப்ரியல் சிறப்பாக வாதாடி டிஎஸ்பி உள்ளிட்ட 9 காவலருக்கு ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளார். அரசு வழக்கறிஞர் ஆனந்த கேப்ரியலுக்கு பொதுமக்கள் அரசியல் பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.