மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்!
தூத்துக்குடியில் மத்திய அரசை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

தூத்துக்குடியில் வக்பு திருத்த சட்டத்தை கண்டித்தும் அதனை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருவதை கண்டித்தும் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்புக் கொடி ஏந்தி கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் மத்திய பாரதிய ஜனதா அரசு கொண்டுவந்துள்ள வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை கண்டித்தும் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் ஜனநாயக விரோத சட்டங்கள் மூலம் மக்களை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய பாரதிய ஜனதா அரசை கண்டித்து தமிழகத்திற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி வருவதை கண்டிக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த காங்கிரஸ் கட்சி சார்பில் தூத்துக்குடி விவிடி சிக்னல் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடி மற்றும் கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர காங்கிரஸ் மாவட்ட தலைவர் முரளிதரன் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் இதில் கலந்துகொண்டு மத்திய பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்