காணாமல் போன மூதாட்டி கிணற்றில் சடலமாக மீட்பு :
கோவில்பட்டி அருகே காணாமல் போன மூதாட்டி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

கோவில்பட்டி அருகே காணாமல் போன மூதாட்டி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே தோனுகால் கிராமம் முதல் தெருவை சோ்ந்தவா் சுந்தரராஜ் மனைவி ருக்மணி அம்மாள் (78). வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாா். நேற்று முன்தினம் அவரை கணவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தேடியபோது, அவரை காணவில்லையாம். இதையடுத்து, அவா் கோயம்புத்தூரில் உள்ள மகன் சுரேஷுக்கு தகவல் தெரிவித்தாராம். இந்நிலையில் நேற்று ஊருக்கு வந்த சுரேஷ், தாயை தேடியபோது படா்ந்தபுளியில் உறவினா் தோட்டத்தில் உள்ள கிணற்றில் ருக்மணி அம்மாள் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சடலத்தை மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.