நாமக்கல்லில் தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பன் நினைவுதினம் அனுசரிப்பு !
நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் எம்பி., நாமக்கல் முன்னாள் எம்பி. ஏ.கே.பி.சின்ராஜ் ஆகியோர் சிலம்பொலி யார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.;
நாமக்கல்லில், தமிழறிஞா் சிலம்பொலி சு.செல்லப்பன் 6-ஆம் ஆண்டு நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. நாமக்கல் அருகே சிவியாம்பாளையத்தைச் சோ்ந்த தமிழறிஞா் சிலம்பொலி சு.செல்லப்பன், கடந்த 2019 ஏப்ரல்.6-ஆம் தேதி காலமானாா். அவரது மறைவைத் தொடா்ந்து, சிலம்பொலியாா் அறக்கட்டளை சாா்பில், நாமக்கல் - சேந்தமங்கலம் சாலையில், சிலம்பொலி செல்லப்பன் அறிவகம் என்ற பெயரில் சிலம்பொலி செல்லப்பன் மணிமண்டபம் அமைக்கப்பட்டு, உருவச் சிலையும், அவா் எழுதிய நூல்கள் அடங்கிய நூலகமும் 2023-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.சிலம்பொலி சு.செல்லப்பன் 6-ஆம் ஆண்டு நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அவரது மணிமண்டபத்தில் அனுசரிக்கப்பட்டது.*நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ். மாதேஸ்வரன் எம்பி., நாமக்கல் முன்னாள் எம்பி. ஏ.கே.பி.சின்ராஜ் மற்றும் சிலம்பொலியாரின் மகள்கள் டாக்டர் மணிமேகலை, டாக்டர் கெளதமி, மருமகள் டாக்டர் ஈஸ்வரி,கொங்கு கல்வி நிறுவனங்கள் தாளாளர் வெங்கடாசலம், காவேரி பீட்ஸ் லெனின், டாக்டர் செந்தில், பிஜிபி கல்லூரி தலைவா் கணபதி, சித்தார்த்தன், பழனிசாமி, செல்லப்பன், பூங்கோதை செல்லதுரை, செல்வராஜ், கொமதேக மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ஆர்.எஸ்.ஆர்.மணி, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அருள் மணி, கொமதேக மாவட்ட பொருளாளர் சசிகுமார், தலைமை நிலைய செயலாளர் செல்வராஜ், இணை செயலாளர் சீனிவாசன், தகவல் தொழில்நுட்ப அணி மனோஜ், கொமதேக நாமக்கல் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் மற்றும் தமிழறிஞா்கள், பொதுமக்கள் பலா் அவருடைய உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.