
சேலம் ஷீரடி சாய்பாபா பாதுகை தரிசனம் நிகழ்ச்சி சேலத்தில் வருகிற 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணி முதல் இரவு 9:30 மணி வரை சேலம் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் ஸ்ரீ வரலட்சுமி மகாலில் நடக்கிறது. பாதுகை தரிசனம் மற்றும் ஷீரடி சாய்பாபா பஜனையும் நடைபெறுகிறது. இந்த திரு பாதுகை தரிசனத்திற்கு பக்தர்களுக்கு இலவசமாக அனுமதி வழங்கப்படுகிறது. பாபாவின் பிரசாத அன்னதானம் தொடர்ந்து வழங்கப்படுகிறது. இந்த தரிசன நிகழ்வு குறித்து அதன் நிர்வாகிகள் கூறுகையில், ஷீரடி சாய்பாபா பாதுகை மராட்டிய மாநிலம் ஷீரடி சாய்பாபா சன்னிதானத்திலிருந்து 30 பேர் கொண்ட குழுவுடன் சேலத்திற்கு முதல்முறையாக வருகை தருகிறார்கள். இந்த பாதுகை பல்லக்கு ஊர்வலம் மற்றும் தரிசன நிகழ்ச்சி 19-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 4 மணி அளவில் புதிய பஸ் நிலையம் சரவணாஸ் பேக்கரி அருகில் இருந்து புறப்படுகிறது. முதியவர்களுக்கும், உடல் ஊனமுற்றோருக்கும் தனி வரிசை ஏற்பாடு செய்துள்ளார்கள். இதற்கான ஏற்பாடுகளை சேலம் ஷீரடி சாய் நண்பர்கள் குழு மற்றும் ஷீரடி ஸ்ரீ ஷீரடி சாய்பாபா சன்ஸ்தான் டிரஸ்ட் ஆகியவை இணைந்து செய்துள்ளன.