மத்திய சிறை பல்பொருள் அங்காடியில் பணம் மோசடி
சிறைக்காவலர்கள் 2 பேர் பணி இடை நீக்கம்;

சேலம் மத்திய சிறையில் பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. இதில் சிறைவாசிகளுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்படுகிறது. இதில் விற்பனையாளர்களாக சிறைக்காவலர்கள் அபிமன்னன் (வயது32), பாண்டி (30) ஆகியோர் பணியாற்றி வந்தனர். பொருட்கள் விற்றதில் பணம் மோசடி நடந்து இருப்பதாக புகார் வந்தது. அதன்பேரில் சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது பொருட்கள் விற்றதற்கான பணத்தை சிறைக்கணக்கில் செலுத்தாமல், 2 பேரும் மோசடி செய்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து சிறை காவலர்கள் அபிமன்னன், பாண்டி ஆகிய 2 பேரையும் பணி இடைநீக்கம் செய்து சிறை சூப்பிரண்டு வினோத் உத்தரவிட்டு உள்ளார்.