குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பரபரப்பு பேட்டி

தனது வீட்டை அபகரிப்பு செய்வதற்கு கொலை மிரட்டல் விடும் நபர்கள மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது வீட்டிற்கு பட்டா வழங்க வேண்டும் இல்லை எனில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம் என திண்டுக்கல்லில் கூலி தொழிலாளி வேதனையுடன் பேட்டி;

Update: 2025-04-06 08:43 GMT
குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பரபரப்பு பேட்டி
  • whatsapp icon
திண்டுக்கல் குள்ளனம்பட்டி அரசினர் தொழிற்பயிற்சி பள்ளி எதிரே வசித்து வருபவர் கிருஷ்ணன் அவரது மனைவி தமிழிசை வாணி. இவர்கள் அதே வீட்டில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். திண்டுக்கல் நத்தம் பிரதான சாலையில் வசிக்கும் அவர்கள் மாவட்ட ஆட்சியர் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பல முறை தான் குடியிருக்க வீட்டிற்கு பட்டா வழங்க கோரி மனு அளித்துள்ளனர். பட்டா வழங்குவதாக கூறி அதிகாரிகளும் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதில் சில மாதங்களுக்கு முன்னர் தனது வீட்டிற்கு மட்டும் பட்டா வழங்காததை கண்டித்து மனம் உடைந்த கிருஷ்ணன் மகன் வெங்கடேஷ் மற்றும் மனைவி தமிழிசை வாணி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி ஈடுபட்டனர். இதனிடையே அவர்களது வீட்டிற்கு பின்னால் குடியிருப்பவர் பட்டா பெற்றவர். கிருஷ்ணனுடைய வீட்டையும் ஆக்கிரமிப்பு செய்யும் வகையில் வீட்டின் சுவரை இடிப்பது, கும்பலாக வந்து வீட்டை காலி செய்ய கொலை மிரட்டல் விடுவது உள்ளிட்ட பல்வேறு தொந்தரவுகள் செய்வதுடன், கடந்த வாரம் சுடு கஞ்சியை வெங்கடேசனின் குழந்தைகள் மீது ஊற்றியதாகவும், அதில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதித்து, அப்பொழுதும் எதிரிகள் மீது காவல்துறையிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அண்டை வீட்டிற்கு ஐந்து வீடுகள் அதே பகுதியில் இருப்பதாகவும், இதுகுறித்து வி ஏ ஓ, ஆர் ஐ நேரில் வந்து அளந்து உங்கள் வீடு இல்லை இதோடு முடிந்து விட்டது இனிமேல் இவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என கூறி சென்றதாகவும் தெரிவித்தனர். ஒருபுறம் அரசு பட்டா வழங்கவில்லை மறுபுறம் அண்டை வீட்டார் வீட்டை காலி செய்ய தொந்தரவு என பல்வேறு தொந்தரவுகளை அனுபவித்து வரும் வெங்கடேஷன் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்றும், வருவாய்த் துறையினர் உடனடியாக தனது வீட்டிற்கு பட்டா வழங்க வேண்டும், காவல்துறையினர் தனக்கு கொலை மிரட்டல்கள் விட்டு தனது வீட்டை அபகரிக்க நினைக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேட்டியளித்தார்.

Similar News