ஒன்றிய அரசை கண்டித்து திமுக பொதுக்கூட்டம்
திண்டுக்கல் உழவர் சந்தை அருகே ஒன்றிய அரசு கண்டித்து திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது;

இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி இழைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் திண்டுக்கல் என்.ஜி.ஓ.காலனி பகுதியில் உள்ள உழவர் சந்தை அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினரான ஐ. பி. செந்தில் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சரும், கழக துணை பொதுச்செயலாளருமான ஐ.பெரியசாமி கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். மேலும் நிகழ்ச்சியில் திண்டுக்கல் வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், தலைமை கழக பேச்சாளர் மதுரை பாலா, இளம் பேச்சாளர் சுகாசினி, திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா மற்றும் மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.