திருமானூர் பகுதியில் நம்மாழ்வார் பிறந்த தினத்தை முன்னிட்டு வேளாண் கல்லூரி மாணவர்கள் சார்பில் இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு
திருமானூர் பகுதியில் நம்மாழ்வார் பிறந்த தினத்தை முன்னிட்டு வேளாண் கல்லூரி மாணவர்கள் சார்பில் இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.;

அரியலூர், ஏப்.6- அரியலூர் மாவட்டம், திருமானூர் கிராமத்தில் உள்ள பொது இடங்களில் திருச்சிராப்பள்ளி சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேளாண்புல இறுதியாண்டு மாணவர்கள் , நம்மாழ்வார் பிறந்த தினத்தை முன்னிட்டு ஊர் பொதுமக்களுக்கு இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இயற்கை விவசாயம் என்பது, செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள், வளர்ச்சி ஊக்கிகள் போன்றவற்றைத் தவிர்த்து, இயற்கை வழிமுறைகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்யும் ஒரு முறை, இதன் மூலம் எவ்வாறு அதிக மகசூல் பெறலாம் என்று மக்களுக்கு எடுத்துக்கூறினர் மேலும் எவ்வாறு செலவில்லாமல் இயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளை தயாரிப்பது என்பதை குறித்தும், மண் வளத்தை மேம்படுத்துவது குறித்தும், கரிம பொருட்களின் விலைமதிப்பு குறித்தும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் செயற்கை விவசாயம் பற்றிய பாதிப்புகள் குறித்தும் விளக்கினர். விவசாய பொதுமக்கள் இரசாயன உரங்களை இனி பயன்படுத்துவதனை தவிர்க்க வழி செய்வோம் என்று மாணவர்களிடம் உறுதியளித்தனர். பின்னர் பொதுமக்களுக்கு நம்மாழ்வாரின் இயற்கை விவசாயம் பற்றிய துண்டு பிரசுரங்கள் மற்றும் விதைகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் விவசாய பொதுமக்களால் பாராட்டப்பட்டது.