தமிழகத்தை ஆள்பவர்கள் ஆட்சியாளர்கள் அல்ல ஐஏஎஸ் அதிகாரிகளே ஆட்சியை நடத்துவதாக அண்ணாமலை குற்றச்சாட்டு
தமிழகத்தை ஆள்பவர்கள் ஆட்சியாளர்கள் அல்ல ஐஏஎஸ் அதிகாரிகளே ஆட்சியை நடத்துகிறார்கள் - சொன்னதையும் செய்வோம் சொல்லாததையும் செய்வோம் என்று ஆட்சிக்கு வந்தவர்கள் நான்கு ஆண்டுகளில் எதுவும் செய்யவில்லை என ஐ பெட்டோ அகில இந்திய செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்*;

அரியலூர், ஏப்.6- அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் ஐ பெட்டோ அகில இந்திய செயலாளர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் உறுப்பினர்கள் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன பின்னர் ஐ பெட்டோ அகில இந்திய செயலாளர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா, தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கல்வி கொள்கை, நீட் தேர்வு ரத்து ஆகியவற்றிற்கு எதிராக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை வரவேற்கிறோம் தற்பொழுது தமிழ்நாடு முதலமைச்சராக உள்ள ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நியமனத் தேர்வு எதற்கு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நியமன தேர்வை ரத்து செய்வோம் என கூறி ஆட்சிக்கு வந்த திமுக மீண்டும் நியமன தேர்வு என்பதனை கொண்டு வந்துள்ளது இதனால் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய 60 ஆயிரம் பேர் தற்போது பணி இல்லாமல் உள்ளனர் மேலும் திமுக தனது தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் நிறைவடைந்த நிலையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை இதுவரை செயல்படுத்தவில்லை தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்காத நான்கு மாநிலங்கள் பழைய ஓய்வூதி திட்டத்தை அமல்படுத்தி உள்ளன தமிழகத்தில் ஆறரை லட்சம் அரசு ஊழியர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்திலேயே உள்ளனர் சொன்னதையும் செய்வோம் சொல்லாததையும் செய்வோம் என கூறி ஆட்சிக்கு வந்த திமுக 4 ஆண்டுகளில் அரசு ஊழியர்களுக்கான கோரிக்கைகள் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை தற்போது பொது தேர்வு நடைபெற்று வருவதால் அரசுக்கு எதிரான தங்களது ஆர்ப்பாட்டத்தை ஒத்தி வைத்துள்ளோம் மே மாதம் அனைத்து அரசு அலுவலர்கள் சங்கம் மற்றும் ஆசிரியர் சங்கங்களை ஒருங்கிணைத்து தமிழ்நாடு அரசு திரும்பி பார்க்கும் வகையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் தமிழ்நாடு அரசு தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வாய்ப்பில்லை கொள்கை ரீதியாக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மீண்டும் ஆசிரியர் அரசு ஊழியர்களின் வாக்குகளை கேட்பது மிகப்பெரிய ஏமாற்றத்தை தற்போதைய ஆட்சியாளர்களுக்கு ஏற்படுத்தும் அரசு ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை மக்களுக்கு திருப்பி விடலாம் என்று ஆட்சியாளர்கள் நினைக்கவில்லை ஆனால் ஐஏஎஸ் அதிகாரிகளை இவ்வாறு நடந்து கொள்கின்றனர் தமிழகத்தை ஆள்பவர்கள் ஆட்சியாளர்கள் அல்ல ஐஏஎஸ் அதிகாரிகளே. ஐஏஎஸ் அதிகாரிகள் எடுக்கும் முடிவை ஆட்சியாளர்கள் எதிர்ப்பதில்லை தமிழகத்தை தற்போது ஐஏஎஸ் அதிகாரிகளே ஆண்டு கொண்டு உள்ளனர் இதன் முடிவு வாக்கு வங்கியில் தெரியவரும் என கூறினார்.