ஜெயங்கொண்ட சோழபுரம் உதவும் கரங்கள் சார்பாக அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கும், பார்வையாளர்களுக்கும் உணவளிப்பு பயனாளிகள் நன்றி தெரிவிப்பு
ஜெயங்கொண்ட சோழபுரம் உதவும் கரங்கள் சார்பாக அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கும், பார்வையாளர்களுக்கும் தக்க சமயத்தில் உணவு உபசரிப்பு செய்தமைக்கு பயனாளிகள் மனம் நிறைந்த நன்றி தெரிவித்தனர்.;

அரியலூர், ஏப்.6- ஜெயங்கொண்ட சோழபுரம் உதவும் கரங்கள் சார்பாக அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கும், பார்வையாளர்களுக்கும் தக்க சமயத்தில் உணவு உபசரிப்பு செய்தமைக்கு பயனாளிகள் மனம் நிறைந்த நன்றி தெரிவித்தனர். ஜெயங்கொண்டசோழபுரம் உதவும் கரங்கள் தொண்டு நிறுவனம் துவங்கப்பட்டு 198-வது வார செயல்பாடாக ஜெயங்கொண்டசோழபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள உள்,புற நோயாளிகள், நோயாளிகளைக் சார்ந்தவர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் சுமார் 150 க்கும் மேற்பட்டவர்களுக்கு கல்லாத்தூர் சுப்ரமணிய கோயில் தெருவை சேர்ந்த காலம் சென்ற. தங்கவேலுவின் 11 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவர்களது மகன் பாலசுப்ரமணியன் தங்கவேல் மற்றும் அவர்களது குடும்பத்தார் சார்பாக உணவு வழங்கப்பட்ட.அருமையான உணவினை தங்களுக்கு தக்க சமயத்தில் வழங்கிய பயனாளிகள் மனதார வாழ்த்துகின்ற மேலும் உணவினை குறித்த காலத்தில் சுவையோடு தயாரித்து கொடுத்த ஜெயங்கொண்டம் ஹோட்டல் ஸ்ரீ கார்டன் உரிமையாளர் ஆர்.கே .சண்முகத்திற்கு தொண்டு நிறுவனம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் இதற்கு பெரிதும் ஆதரவாக இருந்த உதவிய செங்குந்தபுரம் ஆசிரியர்கள் மணி, சண்முகசுந்தரம், புவனேஸ்வரிசேதுராமன், செயலாளர், ஜெயங்கொண்டசோழபுரம் உதவும் கரங்கள் சேதுராமன் ராமலிங்கம், உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.