பொது மக்களுக்கு பட்டா வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியில் 68 ஆண்டுகளாக குடியிருக்கும் பொது மக்களுக்கு பட்டா வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்;

Update: 2025-04-07 11:15 GMT
திண்டுக்கல் 33 வது வார்டு மேற்கு மரியநாதபுரம் ஜவகர் புரம் ஆகிய பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 68 ஆண்டுகளாக 64 வீடுகள் கொண்ட குடியிருப்பில் 110 குடும்பங்கள் தினக்கூலி செய்து வாழ்ந்து வருவதாகவும் தங்களுக்கு நிரந்தர வீட்டுமனை பட்டா வழங்கவில்லை என்றும் தங்களது இடம் சிட்கோ-க்கு சொந்தமானது என்றும் பட்டா வழங்க முடியாது என பல வருடங்களாக இழுத்து அடித்து வருவதாகவும் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று சுமார் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Similar News