கிரைய ஆவணத்தை ரத்து செய்யக்கோரி மனு
போலியான ஆவணங்கள் மூலம் பெற்ற கிரைய ஆவணத்தை ரத்து செய்யக்கோரி கொடைக்கானல் பொதுமக்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு;
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சி அஞ்சுவீடு கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அம்மனுவில், மேற்கண்ட விலாசத்தில் 30க்கும் மேற்பட்ட வீடுகளில் குடும்பங்களாக 50 வருடங்களுக்கு மேல் வசித்து வருகின்றோம். சர்வே எண் 2278/3க்கு கட்டுப்பட்ட இடத்தில் கோவில் மற்றும் பொதுச்சாவடி கட்டிடம், மின் இணைப்பு டவர் மற்றும் அரசால் அமைக்கப்பட்ட குடிநீர் போர்வெல் ஆகியவை அமையப்பட்டுள்ளன. அந்த கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் அன்றாட வழிபாடு நடைபெற்று வருகிறது மேலும் பொதுச்சாவடி குடில் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வெளியூரைச் சேர்ந்த பெருமாள் மற்றும் அவருடைய வாரிசுகள் நாகராஜ் என்பவருக்கு மோசடியாக நிலத்தை கிரையம் செய்துள்ளனர். பத்திரப்பதிவில் கோவில்கள், சாவடி ,வீடுகள், போர்வெல் ஆகியவை மறைக்கப்பட்டு கிரையம் செய்துள்ளனர். மோசடியாக கிரையம் செய்த நபர் அடியாட்களுடன் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களை மிரட்டி வருகின்றனர். வேலி அமைத்து பொதுமக்கள் பயன்படுத்த விடாமல் அடாவடியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களை மிரட்டி அச்சுறுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மோசடியாக பதியப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.