போலி உணவுத்துறை அதிகாரி கைது

திண்டுக்கல்லில் போலி உணவுத்துறை அதிகாரி கைது;

Update: 2025-04-07 14:01 GMT
உணவுத்துறை அதிகாரி எனக்கூறி திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக கொடைக்கானல் ,ஒட்டன்சத்திரம் பகுதியில் உணவுத்துறை அதிகாரி என ஹோட்டல்களுக்கு போன் செய்து பணம் பணம் பறித்துள்ளார் சண்முகசுந்தரம். அதேபோல் இன்று திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள உள்ள ஒரு பிரியாணி கடையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி என கூறி 500 ரூ G Pay மூலம் பணம் அனுப்பும்படி கடையின் உரிமையாளரிடம் மொபைல் போனில் பேசியுள்ளார். சண்முக சுந்தரத்தை கடை உரிமையாளர் நைசாக அழைத்துள்ளார், கடைக்கு வந்தவரை பிடித்து வைத்து, நகர் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரை விசாரித்ததில் அவர் போலியாக தன்னை உணவுத்துறை அதிகாரி என மொபைல் போனில் பேசி பணம் வைத்து தெரிய வந்தது. பின்னர் அவரை கைது செய்தனர். பிரியாணி கடை உரிமையாளரிடம் உணவு பாதுகாப்பு அதிகாரி என பேசி பணம் கேட்ட ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News