கோயில் கட்டுவதற்கு உத்தரவு பிறப்பிக்க கோரி மனு

திண்டுக்கல் மாவட்டம் கணக்கன்பட்டி அருகே கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் தனி நபர் ஆக்கிரமிப்பை அகற்றி கோயில் கட்டுவதற்கு உத்தரவு பிறப்பிக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு;

Update: 2025-04-07 14:06 GMT
கோயில் கட்டுவதற்கு உத்தரவு பிறப்பிக்க கோரி மனு
  • whatsapp icon
திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா, கணக்கன்பட்டி ஊராட்சி பச்சள நாயக்கன்பட்டி கிராமத்தில் பல ஆண்டுகளாக நத்தம் புறம்போக்கில் விநாயகர் கோவில் இருந்தது. சாலை விஸ்தரிப்புக்காக நெடுஞ்சாலை துறை சார்பில் கோயில் அகற்றப்பட்டது. பின்னர் ஊர் பொதுமக்கள் அரசு அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினரிடம் அனுமதி பெற்று மீண்டும் கோயில் அமைக்க காத்திருந்த பொழுது, கோயிலுக்கு பின்னால் இருந்த தனிநபர் வீட்டின் வாசலை மாற்றி அமைத்ததோடு மட்டுமின்றி கோயில் இருந்த நத்தம் புறம்போக்கு நிலத்தில் வணிக வளாகம் அமைத்து கோவில் அமைப்பதற்கான இடமில்லாமல் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இது சம்பந்தமாக பழனி கோட்டாட்சியர் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஏற்கனவே மனு அளித்துள்ளோம் மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் ஆக்கிரமிப்பு அகற்றி மீண்டும் கோயில் கட்டி பொதுமக்கள் வழிபடுவதற்கு அனுமதிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் கிராம மக்கள் அனைவரும் ஆதார் அட்டை ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து அடையாள அட்டைகளையும் அரசிடமே ஒப்படைத்து வரும் தேர்தலில் வாக்களிக்க போவதில்லை என தெரிவித்தனர்.

Similar News