ஆட்சியரகம் முற்றுகை: நாதகவினர் எச்சரிக்கை
மாசடைந்த தண்ணீர் பாட்டில்களை மாலையாக அணிந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்;

ஆட்சியரகம் முற்றுகை: நாதகவினர் எச்சரிக்கை! பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் மருதையாற்றில் திறந்து விடுவதால் கிராம மக்கள் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டி அக்கிராம மக்கள், நாம் தமிழர் கட்சியினருடன் இனைந்து இன்று (ஏப்.07) மாசடைந்த தண்ணீர் பாட்டில்களை மாலையாக அணிந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும் இதனை சரி செய்யாவிட்டால் ஆட்சியர் அலுவலகத்தை நாதக சார்பாக முற்றுகையிடப்படுமென தெரிவித்தனர்.