தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்;

Update: 2025-04-07 14:22 GMT
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  • whatsapp icon
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டத்தலைவர் ஜான்பாஸ்டின்டல்லஸ் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் சுகந்தி பேசினார். வருவாய்த்துறை ஊழியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கவேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும். கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்கிடவேண்டும். பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் முபாரக் கலந்துகொண்டு பேசினார். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் துரைராஜ் நன்றி கூறினார்.

Similar News