ராசிபுரம் அருகே அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு...

ராசிபுரம் அருகே அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு...;

Update: 2025-04-07 14:35 GMT
ராசிபுரம் அருகே அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு...
  • whatsapp icon
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட மெட்டாலா நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றிய கழக செயலாளர் கே.பி.எஸ். சரவணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி,சரோஜா, மற்றும் முன்னாள் எம்எல்ஏ பிரபு உள்ளிட்டோர் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கியும்,வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அதிமுக சாதனை திட்டங்களையும், திமுகவின் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பொதுமக்களிடையே எடுத்துரைக்க வேண்டும் என பேசினார். முன்னதாக மெட்டாலா பகுதியில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர்,தர்பூசணி, கூல்ட்ரிங்ஸ்இளநீர் உள்ளிட்டவைகளை வழங்கி அதனைத் தொடர்ந்து அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் சந்திரசேகர் தலைமையில் அதிமுக சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை முன்னாள் அமைச்சர்கள் பொது மக்களிடையே வழங்கினர். நிகழ்ச்சியில்‌ மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் கே.பி.எஸ். சுரேஷ் குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் எம்.ஏ.பிரபு மற்றும் கட்சி நிர்வாகிகள்,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்...

Similar News