கோவில் குளத்தில் குளிக்கச் சென்றவர் உயிரிழப்பு
கோவில் குளத்தில் குளிக்கச் சென்றவர் உயிரிழப்பு;

மதுராந்தகத்தில் கோவில் குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகர் பகுதியில் சேர்ந்த வினோத்குமார் வயது 38 கடப்பேரியில் உள்ள வெங்கடேஸ்வரர் கோவில் குளத்தில் குளிக்க சென்ற பொழுது தவறி கீழே விழுந்து சம்பவ இடத்தில் உயிர் இழந்தார். இதை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற மதுராந்தகம் போலீசார் குளத்தில் மூழ்கி உயிரிழந்த வினோத்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.