வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நகை பறிப்பு

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நகை பறிப்பு;

Update: 2025-04-07 14:40 GMT
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நகை பறிப்பு
  • whatsapp icon
செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அருகே பழையனூர் கிராமத்தை சேர்ந்தவர் முனியம்மாள் இவர் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி வீட்டில் தனியாக வசித்து வருகிறார். மூதாட்டி தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று இரவு முனியம்மாள் அவர்களின் வீட்டு கதவினை மர்ம நபர்கள் தட்டியுள்ளனர் இதை அடுத்து வீட்டின் கதவை திறந்து பார்த்த பொழுது மர்ம நபர் ஒருவர் வீட்டின் உள்ளே சென்று இரும்பு பெட்டிக்குள் வைத்திருந்த ஒரு சவரன் தங்க நகையை மர்ம நபர் எடுத்து சென்றதை அடுத்து மூதாட்டி கூச்சல் இட முயன்ற போது மூதாட்டியின் கழுத்தில் கத்தியை காட்டி மிரட்டி மூதாட்டியின் காதில் இருந்த தோடினை மர்ம நபர்கள் காதோடு அறுத்துச் சென்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து முனியம்மாள் படாளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அந்த புகாரின் பேரில் படாளம் போலீசார் மர்ம நபரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News