ஆட்சீஸ்வரர் கோயிலின் தேர் புதுப்பிக்கும் பணி தொடக்கம், சிறப்பு பூஜை
ஆட்சீஸ்வரர் கோயிலின் தேர் புதுப்பிக்கும் பணி தொடக்கம்;

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோவில் இந்து அறநிலைத்துறை சார்பில் செயல்பட்டு வருகிறது. இந்த திருக்கோவிலில் இலங்கிளிஅம்மன் திருத்தேரானது முழுமையாக பழுதடைந்து இருப்பதால் அதனை புதுப்பிக்க வேண்டுமென பல்வேறு தகப்பனார் கோரிக்கை வைத்தனர் அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு உதவியுடன் உபயதாரர்கள் பங்களிப்பில் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் தேரை புதுப்பிக்கும் பணி இன்று தொடங்கப்பட்டது. இந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் விநாயகர் பூஜை பல்வேறு யாக பூஜைகள் நடத்தப்பட்டு பணி தொடங்கப்பட்டது. இதில் கோவில் தலைமை குருக்கள் சங்கர், கோவில் செயல் அலுவலர் தமிழரசி, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மேகலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.