நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் சார்பில் உலக சுகாதார தின சிறப்பு நிகழ்ச்சி!
எர்ணாபுரம் அரசு மருத்துவமனை ஆயுஷ் சித்த மருத்துவ அலுவலர் பூபதி ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு “உணவே மருந்து” என்னும் தலைப்பில் உரையாற்றினார்.;

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் சார்பில் உலக சுகாதார தினத்தினை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் இராஜா தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக எர்ணாபுரம் அரசு மருத்துவமனை ஆயுஷ் சித்த மருத்துவ அலுவலர் பூபதி ராஜா கலந்து கொண்டு “உணவே மருந்து” என்னும் தலைப்பில் ஒவ்வொரு மாணவ, மாணவியர்களும் உடல் நலம் பேணுவதில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும், ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழும்பி அன்றைய நாளுக்குரிய கடமைகளை குறிப்பாக நன்றாக படித்து மாணவ, மாணவியர் நன்றாக விளையாடி நாட்களை கழிக்கும்போது உடல்நலம் மேம்பாடு அடையும் எனவும், அறுசுவை உணவினை கண்டிப்பாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் எடுத்துரைத்தார்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கு தர்பூசணிபழம், உலக சுகாதார தின துண்டுபிரசுரம் மற்றும் மூலிகை செடிகள் வழங்கப்பட்டது. ஆரோக்கியமான ஆரம்பம், நம்பிக்கையான எதிர்காலம் எனும் கருப்பொருளில் இந்த ஆண்டு உலக சுகாதார தினம் அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் சந்திரசேகரன் மற்றும் யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் வெஸ்லி ஆகியோர் செய்திருந்தனர்.