பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்!

மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கான உச்சவரம்பு ஐந்து சதவீதம் என்பதை ரத்து செய்து மீண்டும் பழைய முறைப்படி 25 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும்.;

Update: 2025-04-07 15:40 GMT
பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்!
  • whatsapp icon
பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட மையம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆனந்த் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் விஜயகாந்த் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கான உச்சவரம்பு ஐந்து சதவீதம் என்பதை ரத்து செய்து மீண்டும் பழைய முறைப்படி 25 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், வருவாய்த் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் ராணி நன்றி கூறினார்.

Similar News