கிராம கணக்குகளில் மாறுதல் செய்ய பொதுமக்கள் கோரிக்கை

அரூரில் கிராம வட்ட கணக்குகளில் மாறுதல் செய்ய வேண்டி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு;

Update: 2025-04-08 01:06 GMT
  • whatsapp icon
தர்மபுரி மாவட்டம் அரூர் நகர பகுதியில் 60 வருடங்களாக குடியிருந்து வரும் பொது மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை நேற்று வழங்கினர் அந்த மனுவில் . நாங்கள் சுமார் 60 ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வருகின்றோம். எங்களுக்கு தமிழக அரசு மூலம் 2007ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் அன்றிருந்த டில்லிபாபு, MLA., மற்றும் மாவட்ட ஆட்சியர். அமுதா மூலம் சுமார் 42 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கினார்கள். எங்களுக்கு வழங்கப்பட்ட மனை இடத்தில் தற்போது வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். மேற்படி வீட்டுமனையின் சர்வே எண். 140/7 தோப்பு புறம்போக்கு நிலமாகும். நாங்கள் அனைவரும் மேற்படி கிராம கணக்கில் பதிவு செய்ய வட்டாட்சியர் அவர்களிடம் மனு அளித்தோம். அதற்கு அவர் தற்போது புதியதாக 10 வருடம் குடியிருந்தால் பட்டா வழங்கலாம் என தமிழக அரசு அறிவிப்பின் பேரில் தற்போது பட்டா வழங்கலாம் எனவும், அரூர் சிறப்பு நிலை பேரூராட்சி மூலமாக தீர்மான நகல் வாங்கிதருமாறும், அதன்பிறகு முறையாக தீர்மானத்தில் சேர்த்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேற்படி தீர்மான நகலையும் இணைத்து சர்வேயர், வருவாய் ஆய்வாளர்,வீட்டுமனையை கிராம வட்ட கணக்குகளில் மாறுதல் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News