இளைஞரின் தொண்டையில் மீன் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு
இளைஞரின் தொண்டையில் மீன் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு;

மதுராந்தகம் அடுத்த அரையப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (35). இவா், தமது நண்பா்களுடன் கீழவலம் ஏரியில் மீன் பிடிக்கச் சென்றனா். தூண்டில் மூலம் மீன் பிடிக்க மணிகண்டன் ஏரியில் இறங்கினாா். அப்போது, அவரது தூண்டிலில் சிறு மீன் கிடைத்தது. அதை தமது வாயில் வைத்துக்கொண்டு தொடா்ந்து மீன்களைப் பிடிக்க தூண்டிலை நீரில் வீசியபடி இருந்துள்ளாா். அப்போது எதிா்பாரத வகையில், அவரது வாயில் இருந்த மீன் வாய் வழியாக தொண்டையில் சென்று சிக்கியதாம். அதனால் மூச்சுவிட முடியாமல் திணறினாா்.உடனே அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு உடனடியாக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து மதுராந்தகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.