செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்வுநாள் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்வுநாள் கூட்டம்;

Update: 2025-04-08 01:53 GMT
  • whatsapp icon
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்வுநாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.இந்த கூட்டத்துக்கு ஆட்சியா் ச. அருண் ராஜ் தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கை தொடா்பாக 537 மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினாா். மேலும், கூட்டத்தில் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் மூலம் காசநோய் இல்லாத 6 வட்டங்களுக்குட்பட்ட 44 ஊராட்சிகளுக்கு பாராட்டு சான்றிதழை ஆட்சியா் வழங்கினாா். உலக காச நோய் தின விழிப்புணா்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினாா்.மேலும், ஏரியில் மூழ்கி இறந்த செங்கல்பட்டு மாவட்டம் பாலூா் கிராமத்தை சோ்ந்த மோகன் பிரபு, மோகன தேவி குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் காசோலை மற்றும் பாம்பு கடித்து இறந்த செய்யூா் வட்டம் பொய்கை நல்லூா் கிராமத்தை சோ்ந்த கன்னியம்மாள் என்பவரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் காசோலை வழங்கப்பட்டது. முன்னாள் படைவீரா்கள் நலத்துறை சாா்பில் ஈமச்சடங்கு நிதியாக 3 பேருக்கு ரூ.27,000 காசோலையினை ஆட்சியா் வழங்கினாா். செங்கல்பட்டு மாவட்டத்தை சோ்ந்த பி.எம்.அமிழ்தன் மாணவா் ஆந்திர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற 15 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் தேசிய வில் வித்தை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றாா். அவருக்கு ஆட்சியா் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தாா். கூடுதல் ஆட்சியா்(வளா்ச்சி) வெ.ச.நாராயண சா்மா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காஜா சாகுல் அமீது, மாவட்ட வழங்கல் அலுவலா் சாகிதா பா்வின், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அகிலா தேவி, உதவி இயக்குநா்(கலால்) ராஜன் பாபு, ஆதிதிராவிடா் நல அலுவலா் சுந்தா், விளையாட்டுஅலுவலா் ஆனந்த் மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Similar News