வார சந்தையில் தேங்காய் விற்பனை ஜோர்
காரிமங்கலம் வாரச்சந்தையில் 25 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை;
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரிமங்கலம் பகுதியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாட்களில் மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற தேங்காய் விற்பனைக்காகவே பிரத்தியேகமான வாரச் சண்டை நடைபெற்று வருகிறது இந்த நிலையில் நேற்று ஏப்ரல் 07 நடைபெற்ற வார சந்தையில் சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், தேங்காய் அளவை பொறுத்து 17 முதல் 27 வரையில் பல்வேறு ரகங்களில் தேங்காய் விற்பனை நடந்தது. இதில் சுமார் 25லட்சத்திற்கு தேங்காய் விற்பனையானது. கடந்த வாரத்தை காட்டிலும் தேங்காய் வரத்து மற்றும் விற்பனை அதிகரித்த நிலையில், தேங்காய் விலை உயர்ந்த தாக வியாபாரிகள் தெரிவித்தனர். திருமணம், தமிழ் புத்தாண்டு மற்றும் கோயில் விழாக்கள் போன்றவை நடக்க உள்ளதால், தேங்காய் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரி தெரிவித்தனர்