அவலூர்பேட்டை சித்தகிரி முருகர் கோவிலில் பங்குனி உத்திர விழா

சிறப்பு பூஜை நடைபெற்றது;

Update: 2025-04-08 06:23 GMT
அவலுார்பேட்டை சித்தகிரி முருகன்கோவிலில் பங்குனி உத்திர விழா கடந்த 2ம் தேதி துவங்கியது. 6 ம் நாளான நேற்று குகைக்கோவிலில் கலச ஸ்தாபிதம் செய்து சிறப்பு அபிஷேகம் நடந்தது. உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மலை அடிவாரத்தில் தினசரி கந்தபுராண சொற்பொழிவு நடக்கிறது.11ம் தேதி காலை 10:00 மணிக்கு புஷ்பரதங்கள் ஊர்வலமும், இரவு திருக்கல்யாண உற்சவம், 12ம் தேதி பட்டிமன்றமும், 13ம் தேதி இரவு தெப்ப உற்சவமும், இசைக்கச்சேரி நடக்கிறது. 14ம் தேதி வழக்காடு மன்றம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் செல்வம், அறங்காவலர் குழு தலைவர் சுதாசெல்வம், குழு உறுப்பினர்கள் லதாமுரளி, விவேகானந்தன் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

Similar News