திருச்செங்கோட்டில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
திருச்செங்கோட்டில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்;
தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தமிழ்நாடு பல்கலைக்கழக சட்ட திருத்த 2வது மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களை காலக்கெடு இல்லாமல் நிறுத்தி வைத்திருந்த கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்திருந்த வழக்கில் கவர்னரை கண்டித்து தீர்ப்பு வழங்கியதோடு நிலுவையில் இருந்த அனைத்து சட்டமன்ற மசோதாக்களையும் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி நிறைவேற்றப் பட்டதாக சுப்ரீம் கோர்ட் அறிவித்திருப்பதை கொண்டாடும் வகையில் திருச்செங்கோடு நகர திமுகவினர் நகரச் செயலாளர் கார்த்திகேயன் தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு ஆகியோர் தலைமையில் பட்டாசு வெடித்துஇனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் மகளிர் அணியினர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் ராஜவேல்,மல்லசமுத்திரம் பேரூர் கழகச் செயலாளர் பேரூராட்சி தலைவர் திருமலை, நகர் மன்ற உறுப்பினர் ரமேஷ்,மற்றும் திமுக முன்னணியினர் மகளிர் அணியினர் இளைஞர் அணியினர் என பலரும் கலந்து கொண்டனர்.