ஆட்சியரின் காரை வழிமறித்து படுத்த நபர்
சிவகங்கை ஆட்சியரின் காரை வழிமறித்து படுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது;
சிவகங்கை அருகே உள்ள கீழவாணியங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவர், தான் நீண்ட காலமாக குடியிருந்து வரும் வீட்டிற்கு பட்டா கேட்டு 6 மாதமாகியும் அதிகாரிகள் அலட்சியமாக இருந்து வருவதாக கூறப்படும் நிலையில், ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர், ஆட்சியரின் காரை வழிமறித்து தரையில் படுத்து உருண்ட நிலையில் அருகில் இருந்த காவலர்கள் அவரை உடனடியாக அப்புறப்படுத்தினர். இதனால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது