சிவகங்கையில் ரேஷன் கடை பணியாளர் ஆர்ப்பாட்டம்

சிவகங்கையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;

Update: 2025-04-08 10:07 GMT
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு, தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலைநிறுத்தம் மற்றும் கருப்பு சட்டை, கருப்பு பேட்ஜ் அணிந்து நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆதார் விரல் ரேகை பதிவு விதிமுறையை தற்போதைய 90% இலக்கிலிருந்து 40% ஆக குறைக்க வேண்டும். TNCSC தராசை மற்றும் அவலுவலக கணிணியுடன் இணைத்த பிறகே நியாய விலைக் கடை POS விற்பனை முனையத்தை இணைக்க வேண்டும், பொதுவிநியோக திட்டத்துக்கென தனி துறை அமைக்க வேண்டும் (தேர்தல் வாக்குறுதியின் ஒரு பகுதியாக), அனைத்து ரேசன் பொருட்களையும் தரமானதாகவும், சரியான எடையில் பொட்டலமாக வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்

Similar News