திருப்பத்தூரில் நியவிலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூரில் நியவிலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்;

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் தமிழ்நாடு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பாக 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து சுமார் 100க்கும் மேற்பட்டோர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வாணியம்பாடி சாலை அருகே உள்ள சிவராஜ் விடுதி அருகே தமிழ்நாடு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பாக மாவட்டத் தலைவர் பக்தாச்சலம் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் கோபிநாதன் முன்னிலையில் 100க்கும் மேற்பட்டோர் கருப்பு சட்டை அணிந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள 508 நியாய விலை கடைகளில் உள்ள 340 பணியாளர்களுக்கு உரிய கோரிக்கை குறித்து பல்வேறு கட்ட ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்ற நிலையில் இன்று மீண்டும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அப்போது பொது விநியோகத் திட்டத்திற்கு தனி துறை அமைக்க வேண்டும். கிடங்கில் இருந்து வரக்கூடிய அனைத்து பொருட்களும் சரியான எடையில் நியாய விலை கடைகளுக்கு அனுப்ப வேண்டும். ப்ளூடூத் வைபை இணைப்பை எடை தராசுடன் நுகர் பொருள் வாணிபக் கிடங்கில் முதலில் இணைக்க வேண்டும். உடன்பிறகு நியாய விலை கடைகளுக்கு இணைக்க வேண்டும். அனைத்து பொருட்களையும் பாக்கெட் முறையில் தயார் செய்து கொடுக்க வேண்டும். நியாய விலை கடை பணியாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதியை அவரவர் வங்கி கணக்கிற்கு செலுத்த வேண்டும். கல்வி தகுதிக்கு ஏற்ப நியாய விலை கடை பணியாளர்களுக்கு பதிவு உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி சுமார் 100க்கும் மேற்பட்ட நியாய விலை கடை பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்