தமிழக அரசு மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்த நிலையில் ராசிபுரத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்...
தமிழக அரசு மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்த நிலையில் ராசிபுரத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்...;

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்கள் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனை அடுத்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இந்த 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.இதில் ஆளுநர் ஏற்க மறுத்த 10 மசோதாக்கள் வருமாறு சென்னை பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக திருத்த மசோதா. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா. தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் திருத்த மசோதா. தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா தமிழ் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா. தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா. அண்ணா பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா. அத்துடன் தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்கள் ஆகும். தற்போது உச்சநீதிமன்றம் இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வேந்தராக ஆவது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பஸ் நிலையம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ராசிபுரம் நகர மன்ற தலைவர் முனைவர் திருமதி ஆர். கவிதா சங்கர் தலைமையில் திமுக கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள், திமுக நிர்வாகிகள் என பலர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்...