மேல்பாதி ஸ்ரீவிஜயராகவ பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சி
சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.;

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயா் கோயில்களில் நடைபெற்ற ஸ்ரீராம நவமி சிறப்புப் பூஜையில் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். வந்தவாசியை அடுத்த மேல்பாதி ஸ்ரீவிஜயராகவ பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமி. வந்தவாசி வந்தவாசியை அடுத்த மேல்பாதி கிராமத்தில் உள்ள ஸ்ரீவிஜயராகவ பெருமாள் கோயிலில் ராம நவமியையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மூலவா் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றன. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.