தமிழ்நாடு சோட்டா கான் கராத்தே அகாடமி தற்காப்பு கலை பயிற்சிப்பள்ளியின் கராத்தே பட்டயத்தேர்வு நடைபெற்றது..
தமிழ்நாடு சோட்டா கான் கராத்தே அகாடமி தற்காப்பு கலை பயிற்சிப்பள்ளியின் கராத்தே பட்டயத்தேர்வு நடைபெற்றது..;

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ரோட்டரி ஹாலில் தமிழ்நாடு சோட்டா கான் கராத்தே அகாடமி தற்காப்பு கலை பயிற்சி பள்ளியின் சார்பில் ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த கராத்தே மாணவ, மாணவியர்களுக்கு கராத்தே பட்டயத் தேர்வு நடைபெற்றது. இதில் 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். மேலும் அவர்களுக்கு பயிற்சியாளர் சரவணன், கிருஷ்ணன், மாணிக்கம், பிரபு, வெங்கடாஜலம், விக்னேஷ், கிஷோர், அஜய், விக்னேஸ்வரன், கோகுலபிரியன் ஆகியோர் மாணவர்களின் உடல் தாங்கும் திறன், தற்காப்பு கலையின் நுணுக்கங்கள் ,கட்டா, குமிட்டி ஆகிய பிரிவுகளில் தேர்வை நடத்தி மாணவர்களை தேர்வு செய்தனர். மாணவியர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது. விழாவில் அரியா கவுண்டம்பட்டி சக்தி பள்ளியின் தாளாளர் ஆர். அன்பழகன், ஆசிரியர் செல்வகுமார், ஆகியோர் இந்த பயிற்சி பட்டயத்தேர்வு துவக்கி வைத்து தற்காப்பு கலையின் முக்கியத்துவத்தை குறித்து உரையாற்றினார்கள். மேலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ராசிபுரம் எஸ்.ஆர்.வி. பள்ளியின் செயலாளர் திரு. சாமிநாதன், அவர்கள் மாணவர்களுக்கு தற்காப்பு கலையின் முக்கியத்துவத்தையும், கல்வியில் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை குறித்தும் சிறப்புரையாற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழும், பட்டயங்களும், மற்றும் பதக்கங்கள் வழங்கி பாராட்டினார். மேலும் விழாவின் துவக்கத்தில் தலைமை பயிற்சியாளர் ராசிபுரம் சரவணன் வரவேற்று பேசினார்.நிகழ்ச்சி நிறைவில் கிருஷ்ணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.