பூககுழி இறங்கிய பக்தர்கள்

மதுரை மேலூர் அருகே பூக்குழி திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினார்கள்.;

Update: 2025-04-09 01:13 GMT
மதுரை மாவட்டம், மேலூர் கீழவளவு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு வீரகாளியம்மன் கோவில் பங்குனி மாத பூக்குழி திருவிழா நேற்று (ஏப்.8) நடைபெற்றது. இதனை முன்னிட்டு பக்தர்கள் காப்பு கட்டி 15 நாட்கள் விரதம் இருந்து பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், பெரியமந்தையில் இருந்து ஊர்வலமாக சென்று வீரகாளியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர். சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சிலை எடுத்துச் சென்று தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இதில் கீழவளவு, வாச்சம்பட்டி, குழிசேவல்பட்டி, வடக்குவலையபட்டி, இ.மலம்பட்டி, கீழையூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Similar News