சென்னைக்கு கூடுதல் விமான சேவை
மதுரையிலிருந்து சென்னைக்கு கூடுதலாக விமான சேவை இயக்கப்படவுள்ளது.;

விமான நிலையத்திலிருந்து தினசரி சேவையாக சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, மும்பை, போன்ற நகரங்களுக்கும் உள்ளூர் சேவையையும், கொழும்பு, துபாய் என இரு நகரங்களுக்கு, சென்னை வழியாக மலேசியா பினாங் நகருக்கு வெளிநாட்டுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதில் அதிக பட்சமாக மதுரையிலிருந்து சென்னைக்கு தினசரி 10 விமான சேவைகள் இருந்து வருகின்றது. வரும் மே 1ம் தேதி முதல் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் தினசரி விமானச் சேவையாக சென்னை-மதுரை இடையே 11வது சேவையை வழங்க உள்ளது. அதன்படி சென்னையிலிருந்து தினசரி மாலை 6.25 மணிக்கு புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்து சேரும். பின்னர் இங்கிருந்து இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு 9.30 மணிக்கு சென்னை சென்றடையும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.