வாகன ஓட்டுனர்களுக்கான ஓய்வறையை, திறந்து வைத்த கலெக்டர்
வாகன ஓட்டுனர்களுக்கான ஓய்வறையை, திறந்து வைத்த கலெக்டர்;

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் அலுவலகம், வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மை, கூட்டுறவுத் துறை, முதன்மை கல்வி அலுவலகம், மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.இந்த அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகளின் வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்கள், தங்கி ஓய்வெடுக்க அறை இல்லாமல் பாதிக்கப்பட்டனர். இதையடுதது, வாகன ஓட்டுனர்கள் ஓய்வெடுக்க அறை ஒதுக்கித் தருமாறு, கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை பரிசீலித்து, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தரை தளத்தில், வாகன ஓட்டுனர்களுக்கு ஓய்வறை ஒதுக்கீடு செய்து, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, ஓட்டுனர்களுக்கான ஓய்வறையை, மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், நேற்று திறந்து வைத்தார். இதில், கூடுதல் கலெக்டர் நாராயணசர்மா மற்றும் கலெக்டர் அலுவலக வாகன ஓட்டுனர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.