திருவேங்கடம் தாலுகா அலுவலகத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை
தாலுகா அலுவலகத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை;

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் பகுதியில் உள்ள மாடசாமி கோவில் பின்புறத்தில் 8 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக கட்டி முடிக்கப்பட்டு தாலுகா அலுவலகம் இன்னும் பொருள்காட்சியாக காணப்படுகிறது. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு இந்த தாலுகா அலுவலகத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.