திமுக சார்பில் தெருமுனைப் பிரச்சாரம்
பல்லடம் அருகே திமுக சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது;

பல்லடம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தெரு முனை பிரசார கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பல்லடம் அருகே உள்ள லட்சுமி மில் மற்றும் வெங்கிட்டாபுரம் பகுதிகளில், தெருமுனைப் பிரசாரக் கூட் டம் நடைபெற்றது. இந்தக் கூட்டங்களுக்கு மாவட்ட துணைச் செயலாளர் வக்கீல் எஸ். குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் நா.சோமசுந்தரம், முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவைத்தலைவர் சாமிநாதன் வரவேற்றார். இந்த கூட்டங்களுக்கு பல்லடம் மேற்கு ஒன்றிய செயலாளர் சு. கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் தலைமை கழக பேச்சாளர்கள் சைதை சாதிக், திருப்பூர் ரஜினிசெந்தில், மனோகர் பாபு ஆகியோர் பேசினர். காங்கிரஸ் வட்டாரத் தலைவர் புண்ணியமூர்த்தி, மாவட்ட பிரதி நிதி அன்பரசன், இளைஞர் அணி ராஜேஸ்வரன் மற்றும் சுப்பிரமணியம், கதிர்வேல், ராஜேஸ்வரி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.