கோவை: ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது !

போத்தனூர் பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி கைது.;

Update: 2025-04-09 05:52 GMT
கோவை: ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது !
  • whatsapp icon
கோவையில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது போலீசார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், போத்தனூர் போலீசாருக்கு நேற்று நஞ்சுண்டாபுரம் பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் நோட்டுப் புத்தகங்களுடன் செல்போனை பார்த்தபடி குறிப்பெடுத்துக் கொண்டிருந்தனர். சந்தேகமடைந்த போலீசார் அவர்களை விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து, இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில், அவர்கள் சுந்தராபுரத்தைச் சேர்ந்த அஷ்ரப் அலி மற்றும் கரும்புக்கடையைச் சேர்ந்த இப்ராஹிம் (எ) பெல்ட் இப்ராஹிம் என்பது தெரியவந்தது. விசாரணையில், பெல்ட் இப்ராஹிம் கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளி என்பதும், சிறையிலிருந்து விடுதலையான பின் தற்போது ஆன்லைன் லாட்டரி மூலம் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Similar News