தேவகோட்டையில் பூச்செரிதல் விழா
முத்துமாரியம்மன் கோவிலில் பூச்செரிதல் விழா - நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்;

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை கம்பர் தெரு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் 78-வது ஆண்டு பங்குனி பூச்செரிதல் உற்சவ விழா காப்பு கட்டுடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் முக்கிய நிகழ்வான இன்று செல்லப்ப செட்டியார் சிவன் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், வேல் காவடி, பறவை காவடி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு சென்று உப்பு குழியில் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர். அதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பஞ்சமுக தீபாராதனை காண்பித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்