தெருவில் விழுந்த சோலார் விளக்கு - கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்
மானாமதுரையில் சோலார் விளக்கு அடியோடு சாய்ந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்;

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை - ஆதனூர் சாலை செல்லும் பகுதியில் நுட வைத்திய சாலை உள்ளது. இப்பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் இரு சோலார் மின்விளக்குகள் ஒரே போஸ்ட் கம்பத்தில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில் திடீரென சோலார் மின் கம்ப விளக்குகள் அடியோடு சாய்ந்து தெருவில் விழுந்ததோடு, இரவு நேரத்திலும் விளக்கு எரிந்த நிலையில் உள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என கூறப்படும் நிலையில் அதனை சரி செய்துதர கோரிக்கை விடுத்துள்ளனர்