டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மனு

தேவகோட்டையில் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி கிராம மக்கள் மனு அளித்தனர்;

Update: 2025-04-09 06:49 GMT
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மனு
  • whatsapp icon
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம்நகரில் பொதுமக்கள் வசிக்கும் இடத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கடந்த ஒரு வருடமாக பொதுமக்கள் போராடி வருகின்றனர். ஏற்கனவே டாஸ்மாக் கடை ஒன்று இருக்கும் இடத்தில் இருந்து 20அடி தூரத்தில் மற்றொரு கடையை திறந்துள்ளனர். டாஸ்மாக் கடையினை ஒட்டி 100மீட்டர் தூரத்தில் மசூதி, மேல்நிலைப்பள்ளி, பஸ் நிறுத்தம் உள்ளது. மேலும் டாஸ்மாக் கடையினால் பொதுமக்கள் பெரும் இடையூறுகளை சந்தித்து வருகின்றனர். கடந்த வாரம் அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில் சீதாலெட்சுமி என்பவர் தாக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் தேவகோட்டை சப்கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்

Similar News