வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கிய உச்சநீதிமன்றம்.
தமிழக சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்தது, குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தது சட்டவிரோதமானது.;

தமிழக சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்தது, குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தது சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. ஆளுநர் சட்டவிரோதமாக குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்த 10 மசோதாவுக்கும் உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி நீதிபதிகள் அதிரடியாக ஒப்புதல் அளித்தனர். அமைச்சரவை அறிவுரையின்படி மட்டும் தான் மாநில ஆளுநர் செயல்பட முடியும். தன்னிச்சையாக செயல்பட அவருக்கு அதிகாரம் கிடையாது என்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை உச்சநீதிமன்றம் நேற்று வழங்கியது.அரசியலமைப்புச் சட்டத்தையும் - ஜனநாயகத்தையும் நிலைநிறுத்தி, மாநிலங்களின் உரிமைகள் மற்றும் சுயாட்சியை மீண்டும் உறுதிப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தீர்ப்பினை பெற்று தந்த கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் தளபதி அவர்களை நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் கேஆர்என்.இராஜேஸ்குமார் , ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் , நாமக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் கேஎஸ்.மூர்த்தி சந்தித்து நன்றி தெரிவித்தனர். நிகழ்வின்போது வெண்ணந்தூர் ஒன்றிய கழக செயலாளர் ஆர்எம்.துரைசாமி உடனிருந்தார்.