சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா

சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா மாவிளக்கு ஊர்வலம்;

Update: 2025-04-09 10:38 GMT
சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா
  • whatsapp icon
தூத்துக்குடி சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி, மாவிளக்கு வீதிவலம் நடைபெற்றது. தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற சண்முகபுரம் பத்திரகாளி அம்மன் கோவில் பங்குனித் திருவிழா கடந்த 1ம் தேதி கால் நாட்டு விழாவுடன் தொடங்கியது. தினமும் உச்சிகால பூஜையும், இரவில் திருவிளக்கு பூஜையும் நடைபெற்று வந்தது. பத்திரகாளியம்மன், மாரியம்மன், உஜ்ஜைனி மாகாளி அம்மன், துர்க்கை அம்மன் ஆகிய அம்மன்களுக்கு பெண்கள் தாய் பொங்கலிட்டு, சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. தொடர்ந்து இரவு அம்மனுக்கு முளைப்பாரி, மாவிளக்கு எடுத்து வீதிவலம் வந்தனர். இந்த ஊர்வலமானது கோவிலில் இருந்து புறப்பட்டு சண்முகபுரம் அனைத்து தெருக்களையும் சுற்றி மீண்டும் கோவிலை வந்தடைந்தது. சுமார் 200 பேர் நேர்ச்சையாக முளைப்பாரி, மாவிளக்கு எடுத்து வந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், மற்றும் மாதா் சங்கத்தினர் செய்திருந்தனர்.

Similar News