திருப்பத்தூரில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
இஸ்லாமியர்களுக்கு எதிராக திருத்தம் செய்யப்பட்ட வகுப்பு வாரிய மசோதா சட்டம் குறித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

திருப்பத்தூர் மாவட்டம் *பத்து அம்ச கோரிக்கைகள் குறித்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தமிழக ஆளுநரை கொட்டி இருக்கிறது.. இதைவிட ஆளுநருக்கு கேவலம் எதுவும் இல்லை விசிக மாநில துணை பொதுச் செயலாளர் வன்னியரசு திருப்பத்தூரில் நடைபெற்ற வகுப்பு வாரிய கண்டன ஆர்ப்பாட்டத்தில் காட்டம் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் பாரத ஸ்டேட் வங்கி அருகே திருப்பத்தூர் மாவட்ட விசிக சார்பாக மாவட்ட செயலாளர் வெற்றி கொண்டான் தலைமையில் மக்களவையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக திருத்தம் செய்யப்பட்ட வகுப்பு வாரிய மசோதா சட்டம் குறித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விசிக மாநில துணை பொதுச் செயலாளர் வன்னியரசு வகுப்பு வாரிய சட்டம் திருத்தம் செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் இஸ்லாமிய மக்களின் சொத்துக்களை கொள்ளை அடிக்க வேண்டும் என்கிற ஒரே காரணம்தான். இஸ்லாமியர் கட்டிய செங்கோட்டை வேண்டும் இஸ்லாமியர் வடிவமைத்த தேசிய கொடி வேண்டும் இஸ்லாமிய முழுக்கமிட்ட பாரத் மாதா கி ஜே என்கிற வாசகம் வேண்டும் ஆனால் இஸ்லாமியர்கள் மட்டும் வேண்டாம் அவர்களுடைய சொத்தை கொள்ளை அடிக்க வேண்டும் என்று பாஜக அரசு நினைக்கிறது. நாகலாந்தில் தேசியக்கொடி சம்பந்தமாக இரட்டை டாக்குமெண்ட் தயார் செய்து 420 வேலை செய்தவர்தான் நம்முடைய ஆளுநர் அதனால் அங்கிருந்த நாகலாந்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து துரத்தி விடப்பட்ட பிறகு 2021 இல் இங்கு வந்தவர்தான் ஆளுநர் ரவி. இன்று உச்ச நீதிமன்றம் ஆளுநர் ரவிக்கு கொட்டு வைத்திருக்கிறது. ஆளுநர் ரவியின் செயல்பாடுகளில் நேர்மை இல்லை அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை மாநில அரசு வழிகாட்டுதலின் படி தான் ஆளுநர் செயல்பட வேண்டும் எனவே மசோதா குறித்த பிரச்சனையில் ஆளுநர் கையெழுத்து போடவில்லை என்றால் உச்ச நீதிமன்றமே தங்களுக்கு உரிய 142 அதிகாரத்தை பயன்படுத்தி கையெழுத்து போடலாம் என்று கூறி கையெழுத்தை போட்டு அனுப்பி வைத்து விட்டது இதைவிட ஆளுநர் ரவிக்கு வேறு கேவலமில்லை. அதனால் தான் விசிக பொதுச் செயலாளர் திருமாவளவன் ஆளுநர் ரவி பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர் உடனே அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அறிக்கை விட்டு இருக்கிறார் என்று காட்டமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் 250க்கும் மேற்பட்ட விசிக தொண்டர்கள் இஸ்லாமியர்கள் கலந்து கொண்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விசிக மண்டல செயலாளர் சுபாஷ் சந்திர போஸ் மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் அனைத்து கிளை நகர ஒன்றிய விசிக பொறுப்பாளர்கள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.