புதுக்கோட்டை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நகர்மன்ற வளாகத்தில் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவர் சலீம், நகர்மன்ற உறுப்பினர்கள் அப்துல் ரகுமான், செந்தாமரை பாலு, பால்ராஜ் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
