விக்கிரவாண்டி அருகே கஞ்சா வழக்கில் தேடுபட்ட வாலிபர் கைது
போலிசார் வழக்கு பதிந்து விசாரணை;
விக்கிரவாண்டி அருகே கஞ்சா வழக்கில் தேடப்பட்டவரை போலீசார் கைது செய்தனர். விக்கிரவாண்டி சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் நேற்று மாலை கப்பியாம்புலியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு, சந்தேகத்திற்கிடமான நபரை பிடித்து விசாரித்தனர். அவர், காப்பியாம்புலியூரை சேர்ந்த சந்தோஷ், 23 ; என்பதும், கஞ்சா வழக்கில் விக்கிரவாண்டி போலீசார் அவரை தேடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சந்தோஷை கைது செய்தனர்.