வில்வாணி நட்சத்திர கோயில் முருகர் ஆலய தேர் திருவிழா.
சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட வில்வாணி நட்சத்திர கோயில் முருகர் ஆலய தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. தேர் திருவிழாவை முன்னிட்டு அதி காலை முதலே சிறப்பு அலங்காரங்கள் அபிஷேகங்கள் நடைபெற்று வந்த நிலையில் நகரில் முக்கிய வீதி வழியாக தேர் திருவிழா நடைபெற்றது இந்நிகழ்வில் போளூர், கலசப்பாக்கம், திருவண்ணாமலை, வில்வாரணி, வீரலூர், மேல்சோழங்குப்பம், கேட்டவரம்பாளையம், பேட்டை, திரிசூர், சோழவரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.